கோவையின் முன்னாள் எம்.பி காலமானார்!

published 1 week ago

கோவையின் முன்னாள் எம்.பி காலமானார்!

கோவை: கோவையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.மோகன் (வயது 81) உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்.

கோவையில் கடந்த 1980 ஆண்டு கோவை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகவும்,1989 ஆம் ஆண்டில் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகவும் பணியாற்றியவர் இரா.மோகன். போராட்டம் காரணமாக மிசா சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டவர்.

கோவைக்கு பல்வேறு வளர்ச்சிப் பணிகளைச் செய்து, பொதுமக்களின் அன்பு, நன்மதிப்பைப் பெற்ற இவரை முதலமைச்சர் ஸ்டாலின் கோவை வரும்போதெல்லாம் சந்திப்பது வழக்கம். இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை இரா.மோகன் உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு தி.முக கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe