பாஷா உயிரிழப்பு- கோவை வந்தடைந்த மத்திய அதிவிரைவு படை...

published 3 days ago

பாஷா உயிரிழப்பு- கோவை வந்தடைந்த மத்திய அதிவிரைவு படை...

கோவை: கோவை குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான பாஷா உடல்நல குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கு இன்று மாலை பூமார்க்கெட் பகுதியில் உள்ள திப்புசுல்தான் கபர்கஸ்தானில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் அவரது இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் அவரது இறுதி ஊர்வலத்தின் ஏராளமானோர் பங்கேற்பதற்கு ஊர்வலமாக வருவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாதுகாப்பு கருதி கோவை மாநகர காவல் துறையினர் மற்றும் மத்திய அதிவிரைவு படையினர் என 3000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.

இதற்காக 200க்கும் மேற்பட்ட அதிவிரைவு படை போலிசார் மாநகர காவல்துறையினர் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு வந்துள்ளனர்.

தொடர்ந்து இறுதி ஊர்வலம் நடைபெறும் சாலைகளில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வார்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe