பத்திரிகையாளர் குறித்து அவதூறு; நடிகர் எஸ்.வி.சேகருக்கு சிறை தண்டனை விதிப்பு!

published 1 year ago

பத்திரிகையாளர் குறித்து அவதூறு; நடிகர் எஸ்.வி.சேகருக்கு சிறை தண்டனை விதிப்பு!

சென்னை: பெண் பத்திரிகையாளரை அவதூராக பேசிய வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறாக பேசியதாக நடிகரும் , பா.ஜ., பிரமுகருமான எஸ்.வி.சேகர் மீது தொடரப்பட்ட வழக்கு சென்னை சிறப்பு  நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நிதிமன்றம், எஸ்.வி.சேகர் மீதான குற்றச்சாட்டு உறுதியாகி இருப்பதாக தீர்ப்பு வழங்கியதோடு, அவருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

இதனிடையே எஸ்.வி.சேகர் தரப்பு அபராத தொகையை உடனடியாக செலுத்துவதாகவும், வழக்கு குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாகவும் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe