கோவையில் ஆட்டோ ஓட்டுநர், மீது போலீசார் தாக்குதல்- வைரல் வீடியோ காட்சிகள்...

published 1 year ago

கோவையில் ஆட்டோ ஓட்டுநர், மீது போலீசார் தாக்குதல்- வைரல் வீடியோ காட்சிகள்...

கோவை: கோவையில் போக்குவரத்து காவலரும் ஆட்டோ ஓட்டுநரும் சாலையில் ஒருவருக்கொருவர் தாக்குதல் நடத்திக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

கோவை பாலசுந்தரம் சாலையில் போக்குவரத்து காவலர்கள் வாகன பரிசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றை வழிமுறைத்து ஆட்டோவின் ஆர்சி புக் மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை பரிசோதித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த ஆட்டோவை ஓட்டி வந்த நபர் மது போதையில் இருந்தது தெரிய வந்தது.   இந்த நிலையில் போக்குவரத்து காவலர்களுக்கும் ஆட்டோ ஓட்டுநருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

 

அப்பொழுது ஆட்டோ ஓட்டுனர் காவலர்களை தரைக்குறைவாக பேசியதாக சொல்லப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த போக்குவரத்து காவலர் ஒருவர் ஆட்டோ ஓட்டுனரை அடித்துள்ளார். அப்போது பதிலுக்கு அந்த ஆட்டோ ஓட்டுனரும் போக்குவரத்து காவலரை அடித்தார். 

இதனை அடுத்து அங்கு இருந்த மற்ற போக்குவரத்து காவலர்கள் ஆட்டோ ஓட்டுனரை அடித்து அந்தப் பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினர்.  இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://www.facebook.com/share/v/qXidXZBZTfePntmm/?mibextid=oFDknk

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe