கோவையில் ஆட்டுக்குட்டியை வழங்கி, அண்ணாமலையை கிண்டலடித்த தி.மு.க., தொண்டர்கள்! - VIDEO

published 10 months ago

கோவையில் ஆட்டுக்குட்டியை வழங்கி, அண்ணாமலையை கிண்டலடித்த தி.மு.க., தொண்டர்கள்! - VIDEO

கோவை: கோவையில் அமைச்சர் ராஜாவுக்கு திமுக தொண்டர்கள் ஆட்டுக்குட்டியை வழங்கி பா.ஜ.க., தலைவர் அண்ணாமலையை கிண்டலடித்துள்ளனர்.

பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை சமூக வலைதளங்களில் தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் "ஆட்டுக்குட்டி" என்று கிண்டலடித்து வருகின்றனர்

இதனிடையே தி.மு.க., சார்பில் கோவை தொகுதியில் போட்டியிடும் கணபதி ராஜ்குமார் இன்று மருதமலையில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவும் சென்றார்.

அப்போது அங்கு வந்த தொண்டர்கள், அமைச்சருக்குக் கருப்பு நிற ஆட்டுக்குட்டி ஒன்றை பரிசாக வழங்கினர். இதனைப் பார்த்ததும், மறுவார்த்தையே பேசாமல் சிரித்து தீர்த்தார் அமைச்சர். 

அமைச்சர் மட்டுமல்லாது தி.மு.க., தொண்டர்களும், கோயிலுக்கு வந்த பொதுமக்களும் சிரிப்பலைகளை வெளிப்படுத்தினர்.

இந்த செய்திக்கான வீடியோவை காண : https://youtu.be/1A2F2AjCDPg

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe