நான் ஒரு டிரைவர்...! மருதமலையில் அண்ணாமலை பிரசாரம்!

published 10 months ago

நான் ஒரு டிரைவர்...! மருதமலையில் அண்ணாமலை பிரசாரம்!

கோவை: கோவை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை மருதமலை முருகன் கோவில் அடிவாரத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு அவரது பிரச்சாரத்தை துவக்கினார்.

இதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் பேசிய அண்ணாமலை,

இது ஒரு வித்தியாசமான தேர்தல்.10 ஆண்டுகளாக பிரதமரின் தொலை நோக்கு பார்வை எழுச்சியை காட்டுகிறது.பிரதமர் 400 எம்பி களை தாண்டி அமர வேண்டும்.70 ஆண்டுகளாக அரசியல் காரணங்களுக்காக எடுக்கப்படாத விஷயங்கள் இந்த 5 ஆண்டுகளில் எடுக்கப்படும்.

இந்தியாவின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு பிரதமர் மோடியை மீண்டும் அமர வைக்க வேண்டும்.பிரதமருக்கு போட்டியாளர்கள் இல்லை.கோவையை பொருத்தவரை 20 ஆண்டுகளாக வளர்ச்சி தொய்வில் இருக்கிறோம்.கம்யூனிஸ்ட் எம்பியால் கோவை வளர்ச்சி பின் நோக்கி சென்றுள்ளது.1440 கோடி மதிப்பிலான ஸ்மாட் சிட்டியை பார்க்க ஆள் இல்லை.உங்கள் தம்பி அண்ணாமலை அன்பை கோருகிறேன்.பல்வேறு கட்சியினர் அனைவரும் ஒரு சேர வந்துள்ளார்கள்.

ஒவ்வொருவர் வீட்டிற்கும் செல்ல வேண்டிய கடமை உள்ளது.இந்த வண்டி தான் டெல்லி போகின்ற வண்டி. அண்ணாமலை என்கின்ற ஒரே டிரைவர் தான் இருக்கிறேன்.வேறு யாரும் இல்லை.கோவை IOB காலணியில் குப்பை சுத்திகரிப்பு நிலையம் வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கை உள்ளது.திமுக ஆட்சியில் குப்பைகளை தூய்மை செய்வதில் நாம் கீழே சென்று கொண்டிருக்கிறோம்.குப்பை மேலாண்மைக்கு உத்திரவாதம் அளிக்கிறோம்என தெரிவித்தார்.

தொடர்ந்து ல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுவன் சர்வேஷ்,  கிருஷ்ணர் வேடம் அணிந்து மோடி பதாகையுடன் அண்ணாமலையை மாமா என்று அழைத்தார்.

அந்த சிறுவனை அண்ணாமலை அழைத்து கைகுலுக்கி பாராட்டினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe