இந்த காரை வாங்க 25 வருஷம் உழைச்சிருக்கேன்.. கண்ணீர் விட்ட அர்ச்சனா! வீடியோ உள்ளே....!

published 10 months ago

இந்த காரை வாங்க 25 வருஷம் உழைச்சிருக்கேன்.. கண்ணீர் விட்ட அர்ச்சனா! வீடியோ உள்ளே....!

நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது திரை பயணத்தை ஆரம்பித்த  விஜே அர்ச்சனா தமிழில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பான காமெடி டைம்  நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் 2004ம் ஆண்டு வினீத் என்பவரை திருமணம் செய்து கொண்டு  டிவியில் வருவதையும்  குறைத்துக்கொண்டார். குழந்தை பெற்றெடுத்து வளர்ந்த பின் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து முழுநேர தொகுப்பாளினியாக கலக்கி வருகிறார்.

சன் டிவி, விஜய் டிவி, கலைஞர் டிவி உள்ளிட்ட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக வந்து  பார்வையாளர்களை அதிகம் ஈர்த்து வந்தார். மேலும் ஜூனியர் சூப்பர் ஸ்டார், பிக் பாஸ், ஸ்டார் ம்யூசிக் உள்ளிட்ட பல ஷோக்களில் நடுவராகவும், போட்டியாளராகவும் பங்கேற்றுள்ளார். தொலைக்காட்சியில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள அர்ச்சனா, தனி ரசிகர்கள் கூட்டத்தை கொண்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தில் அர்ச்சனா அவரது மகள் சாரா இருவரும் நடித்திருந்தனர்.  இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.  

இந்த நிலையில் தற்போது அர்ச்சனா இணையத்தளத்தில ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். அதற்கு காரணம் இன்ஸ்டாவில் பதிவிட்ட அவரின்  புது கார் குறித்த வீடியோ தான்.

அர்ச்சனா தனது மகள் மற்றும் ஒட்டுமொத்த குடும்பத்தையும் கூட்டி சென்று சொகுசு கார் வாங்கி இருக்கிறார். இவர்  வாங்கி இருக்கும் Mercedes-Benz GLC ரக  காரின் விலை சுமார் 75 லட்சம் ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதற்காக 25 வருடம் உழைத்ததாக கூறி இருக்கிறார்.  புது கார் வாங்கிய நிலையில் அர்ச்சனா கண்ணீர் விட்டு அழும்  வீடியோ  வைரலாகி வருகிறது. 

 

 VJ அர்ச்சனா புது கார் வீடியோ இங்கே!
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe