'Goat' படத்தின் First Single எப்போது? படக்குழு தந்த இன்ப அதிர்ச்சி!

published 10 months ago

'Goat' படத்தின் First Single எப்போது? படக்குழு தந்த இன்ப அதிர்ச்சி!

நடிகர்  விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'கோட்' படத்தின், ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை தற்போது AGS நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'லியோ' படத்தை தொடர்ந்து விஜய் 'GOAT' படத்தில் நடித்து வருகிறார். இது அவருடைய 68வது படமாகும். படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு  இயக்குகிறார். முதல் முறையாக வெங்கட் பிரபு - விஜய் காம்போ இப்படத்தில் இணைத்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 'கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்' என பெயரிடப்பட்டுள்ள  இந்த படம் குறித்த அப்டேட் அவ்வபோது வெளியான வண்ணம் உள்ளது.

'GOAT' படத்தில், நடிகர் பிரபுதேவா, மோகன், பிரசாந்த், வைபவ், சினேகா, ஜெயராம், லைலா, அஜ்மல், உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார்.  யுவன் சங்கர் ராஜா  படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

அண்மையில்  இப்படத்தின் போஸ்டர் ஒன்றை பட குழு வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. கிட்டதட்ட  படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில்  விரைவில் முடிவடையும் என தெரிகிறது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் முதல் சிங்கள் பாடலுக்கு ரெடியா? என கேள்வி எழுப்பி எ ஜி எஸ் நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில். “சம்பவம் உறுதி” எனக் குறிப்பிட்டுள்ளார். அதனால் முதல்பாடல் இன்று (14ம் தேதி) வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழர்களின் புத்தாண்டு குறித்து தமிழ் இலக்கியங்கள் கூறுவது என்ன?

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe