ராயன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

published 6 months ago

ராயன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘ராயன்’ திரைப்படம் முதல் நாள்  வசூல் எவ்வளவு என தகவல் வெளியாகியுள்ளது.

தனது 50-வது படமான ராயன் படத்தை தனுஷ் தானே இயக்கி நடித்துள்ளார். படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, பிரகாஷ் ராஜ், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரையரங்குகளில் நேற்று இந்த படம் வெளியானது. படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படத்தில் அதிக வன்முறை இடம் பெற்றுள்ளதால் A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

ராயன்  டிரெய்லர் ரிலீஸ்! நடிப்பில் மிரட்டிய தனுஷ்... வீடியோ உள்ளே!

இந்நிலையில், இப்படம் வெளியான முதல் நாளில் ரூ.12 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் ரூ.80 முதல் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது. 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe