ஆடிப்பெருக்கு- பேரூர் படித்துறையில் குவிந்த பொதுமக்கள்...

published 6 months ago

ஆடிப்பெருக்கு- பேரூர் படித்துறையில் குவிந்த பொதுமக்கள்...

கோவை: ஆடி பெருக்கு விழா, ஆற்றங்கரைகளிலும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் விவசாயிகள் உழவுப் பணிகளை கடவுளை வழிப்பட்டு தொடங்குவர். நாடு செழிக்க தேவையான நீரைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நதியை தெய்வமாகப் போற்றி வழிபட்டுவர்.  

 

இந்நாளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறைவேறும் என்பது நம் முன்னோர்களின் ஐதீகம். ஆடிப்பெருக்கு நகை வாங்கவும் உகந்த நாளாக கருதப்படுகிறது.  
இந்நாளில் இல்லத்தில் ஆற்றங்கரைகளில் கன்னி தெய்வங்களுக்கு வழிபாடு செய்வதுண்டு.

அந்த வகையில் கோவை மாவட்டத்தில் பேரூர் படித்துறையில் நொய்யல் ஆற்றங்கரையில் பக்கதர்கள் நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர். ஏராளமாக பொதுமக்கள் தொடர்ந்து வருகை புரிந்து வருவதால் காவல்துறையினர் ஏராளமானோர் அப்பகுதியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதே சமயம் மழையின் காரணமாக ஆறுகளில் நீர்வரத்து எப்போது வேண்டுமானாலும் அதிகமாகலாம் என்பதால் பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe