கோவையில் பேருந்தை சுத்துப்போட்ட பொதுமக்கள்- எதற்காக தெரியுமா..?

published 5 months ago

கோவையில் பேருந்தை சுத்துப்போட்ட பொதுமக்கள்- எதற்காக தெரியுமா..?

கோவை கோவை அருகே கருமத்தம்பட்டி நிறுத்தத்தில் நிறுத்த மறுத்ததால் பொதுமக்கள் பேருந்தை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து அவிநாசி சாலை வழியாக திருப்பூருக்கு ஏராளமான தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் காந்திபுரத்தில் திருப்பூர் செல்லும் கே.எம்.எஸ் என்ற தனியார் பேருந்தில் கருமத்தம்பட்டி செல்வதற்காக சில பயணிகள் ஏறி உள்ளனர். 

பேருந்து கிளம்பிய நிலையில் நடத்துனர் கருமத்தம்பட்டியில் பேருந்து நிறுக்காது என கூறி அவர்களை திட்டி பாதி வழியிலேயே இறக்கி விட்டதாக கூறப்படுகிறது. பேருந்தில் இருந்து இறங்கிய பயணிகள், இதுகுறித்து ஊர்பொது மக்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். பேருந்து கருமத்தம்பட்டி அருகே வந்தபோது சுற்றி வளைத்து சிறைபிடித்த ஊர் பொதுமக்கள் ஓட்டுநர் மற்றும் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து அங்கு வந்த போலீசார் இரு தரப்பினரிடமும் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர். ஊர் பொதுமக்கள் பேருந்தை தடுத்து நிறுத்தி சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட செல்போன் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/Yvg2T7dyJ8o

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe