கோவையில் குடிநீர் வழங்கல் துறையில் மாதிரி நேர்காணல்- விவரங்கள் இதோ...

published 4 months ago

கோவையில் குடிநீர் வழங்கல் துறையில் மாதிரி நேர்காணல்- விவரங்கள் இதோ...

கோவை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அறிவிப்பின் வாயிலாக உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர், நகர திட்டமிடல் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகள் அடங்கிய 1933 பணிக்காலியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டு 29.06.2024 மற்றும் 30.06.2024 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன இப்பணியிடங்களுக்கான நேர்காணல் 08.10.2024 முதல் நடைபெற உள்ளது.

இதற்கான மாதிரி நேர்காணல் 04.10.2024 அன்று கோவை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.

எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற மனுதாரர்கள் மேட்டுப்பாளையம் ரோடு கவுண்டம்பாளையம் அடுத்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாகவோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவோ, 9361576081 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு, பயனடையுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe