சாய்பாபா காலனி ரயில்வே பாலத்துக்கு அடியில் மழை நீரில் சிக்கிக்கொண்ட அரசு பேருந்து- வீடியோ காட்சிகள் உள்ளே...

published 3 weeks ago

சாய்பாபா காலனி ரயில்வே பாலத்துக்கு அடியில் மழை நீரில் சிக்கிக்கொண்ட அரசு பேருந்து- வீடியோ காட்சிகள் உள்ளே...

கோவை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலை சுமார் 5 மணி அளவில் இருந்து கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

காந்திபுரம், சித்தாபுதூர், சாய்பாபா காலனி, ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், உக்கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சாய்பாபா காலனி சிவானந்த காலனி செல்லும் சாலையில் உள்ள ரயில்வே பாலத்திற்கு அடியில் தேங்கிய மழை நீரில் அரசு பேருந்து மாட்டிக் கொண்டது. அதில் பயணித்த பயணிகள் பத்திரமாக இறக்கி விடப்பட்ட நிலையில் தற்பொழுது அந்தப் பேருந்தை வெளியே எடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

நேற்றைய தினம் பெய்த கன மழையில் இதே காலத்தில் தனியார் பேருந்து ஒன்று மாட்டிக் கொண்டது குறிப்பிடப்பட்டது.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://www.instagram.com/reel/DBGuftIgYIc/?igsh=Z3dubTZ4M25kOWNm

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe