கோவையில் கேஸ் டேங்கர் லாரி அகற்றம்; ஒருங்கிணைந்து செயல்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் வாழ்த்து 💐

published 3 days ago

கோவையில் கேஸ் டேங்கர் லாரி அகற்றம்; ஒருங்கிணைந்து செயல்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் வாழ்த்து 💐

கோவை: கோவையில் எல்.பி.ஜி லாரி கவிழ்ந்து கேஸ் வெளியான நிலையில், லாரியின் டேங்கர் பலத்த பாதுகாப்புடன் அகற்றப்பட்டது.

கொச்சியில் இருந்து வந்த lPG கேஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரி இன்று
காலை 3.15 மணியளவில் அவினாசி சாலை பழைய மேம்பாலத்தில் விபத்துக்கு உள்ளாகி கவிழ்ந்தது.

கோவையின் மையப்பகுதியில் 18 டன் எல்.பி.ஜி கேஸ் உடன் இருந்த டேங்கர் கவிழ்ந்து கேஸ் கசிவு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அவினாசி சாலை மேம்பாலத்தை ஒட்டி அமைந்துள்ள ஐந்து பள்ளிகளுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் உடனடியாக விடுமுறையை அறிவித்தார். மாணவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்பினர்.

மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவில், போலீசார் அப்பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் எல்லைக்குள் எந்த வாகனங்களும் வராமல், பொதுமக்கள் செல்லாமல் கட்டுப்படுத்தி பாதுகாப்பை உறுதி செய்தனர்.

தீயணைப்புத்துறை வீரர்கள் சுமார் 4 மணி நேரமாக, போராடி கேஸ் கசிவை கடுப்படுத்தினர்.

இதனிடையே, மத்திய பெட்ரோலிய நிறுவனத்தின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, ஆய்வு செய்து டேங்கரில் இருந்து 80 முதல் 100 கிலோ கேஸ் வெளியேறியிருப்பதை உறுதி செய்தனர்.

மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டனர்.

இதனிடையே திருச்சி ஐ.ஓ.சி.எல் நிறுவனத்தில் இருந்து மீட்பு வாகனம் வந்தது. தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

அனைத்து துறை அதிகாரிகளின் 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, சாலையில் கவிழ்ந்த டேங்கர், பலத்த பாதுகாப்புடன்  அகற்றப்பட்டது.

டேங்கர் லாரியின் கான்வாயில், சைரன் வாகனங்கள் முன்னே செல்ல, 4 தீயணைப்பு வாகனங்கள், 2 ஆம்புலன்ஸ்கள் பின்தொடர டேங்கர் லாரி எல்.பி.ஜி குடோனுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது.

18 டன் கேஸ் நிரம்பிய டேங்கரை கவனமாக கையாண்டு, அசம்பாவிதங்களை ஒருங்கிணைந்து தடுத்த மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள், காவல்துறை, தீயணைப்புத்துறை அதிகாரிகளை கோவை மக்கள் வாழ்த்தி, பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe