கோவை அருகே 80 அடி ஆழக் கிணற்றில் 6 நாட்களாக உயிருக்கு போராடிய 2 மாத நாய் குட்டியை மீட்ட தீயணைப்பு துறையினர்…

published 1 day ago

கோவை அருகே 80 அடி ஆழக் கிணற்றில் 6 நாட்களாக உயிருக்கு போராடிய 2 மாத நாய் குட்டியை மீட்ட தீயணைப்பு துறையினர்…

கோவை: கோவை, தொண்டாமுத்தூர் அருகே உள்ள காளப்பாளையம் பகுதியில் உள்ள பயன்பாடு இல்லாத கழிவு பொருட்கள் தேங்கி இருந்த 80 அடி ஆழம் கொண்ட கிணற்றில் கடந்த 6 நாட்களாக இரண்டு மாத குட்டி நாய் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தது. 

அதன் சத்தம் கேட்டு அப்பகுதியில் சென்ற சுதாமுரளி என்ற பெண் விலங்குகள் நல வாரியத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக விலங்குகள் நல வாரியத்தினர்  அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற தொண்டாமுத்தூர் தீயணைப்புத் துறை அலுவலர் அணில் குமார் தலைமையில் 7 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு, உள்ளே விழுந்த இரண்டு மாத குட்டி நாயை மீட்டனர். 

பின்னர் இரண்டு மாத குட்டி நாய்க்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதைத் தொடர்ந்து அதனை தீயணைப்புத் துறையினர் இரண்டு மாத குட்டி நாயை தற்பொழுது பராமரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe