பைக் டாக்ஸிகளை தடை செய்ய வேண்டும்- கோவையில் வலுக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம்...

published 4 days ago

பைக் டாக்ஸிகளை தடை செய்ய வேண்டும்- கோவையில் வலுக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம்...

கோவை: பைக் டாக்ஸிகளை தடை செய்ய வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அதில் பயணிக்கும் பயணிகளின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை, விபத்து காப்பீடு இல்லை என கூறும் ஆட்டோ ஓட்டுநர்கள் உடனடியாக அரசாங்கம் இதில் தலையிட்டு அவற்றை தடை செய்ய வேண்டும் என கோரி வருகின்றனர்.

இந்நிலையில் பைக் டாக்ஸிகளை தடை செய்ய இயலாது என்பது போன்று போக்குவரத்து துறை அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆட்டோ ஓட்டுநர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இரு தினங்களுக்கு முன்பு திடீரென லட்சுமிமில்ஸ் பகுதியில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். 

இந்நிலையில் சிவானந்தாகாலனி பவர்ஹவுஸ் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்நர்கள் பைக் டாக்ஸிகளை தடை செய்ய வலியுறுத்தி சாலையோரம் அமர்ந்து போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe