கணபதி தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை- 1 லட்சம் ரூபாயை கைப்பற்றியுள்ள போலிசார்...

published 6 days ago

கணபதி தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை- 1 லட்சம் ரூபாயை கைப்பற்றியுள்ள போலிசார்...

கோவை: கோவை கணபதியில் தீயணைப்பு நிலையம் உள்ளது . இந்த தீயணைப்பு நிலைய அதிகாரியாக முத்து செல்வன் என்பவர் உள்ளார். கணபதி தீயணைப்பு நிலையத்தில் தடையின்மை சான்றிதழ் வாங்க லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசில் பலர் புகார் அளித்திருந்தனர்.


இதைத்தொடர்ந்து கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் துணை சூப்பிரண்டு திவ்யா தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் அடங்கிய படையினர் மாலை 5.30 மணிக்கு திடீரென்று சென்று சோதனை நடத்தினர்.  விசாரணையில் தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் இருந்து மொத்தம் ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. 

இந்த பணம் தொடர்பாக நிலைய அதிகாரி முத்துசெல்வனிடம் போலீசார் விசாரணை நடத்திய போது சரியான விளக்கம் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார்  பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை லஞ்சப்பணமாக கருதி நிலைய அதிகாரி முத்துசெல்வன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe