கோவையில் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை விழிப்புணர்வு கூட்டம்...

published 5 days ago

கோவையில் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை விழிப்புணர்வு கூட்டம்...

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை சார்பில் ஆண்டு தொழில் ஆய்வு திட்டம் குறித்தான விழிப்புணர்வு கூட்டம் நடைபெறுகிறது. 

மத்திய புள்ளிகள் அலுவலகம் கோவை மண்டலம் சார்பில் நடைபெறும் இக்கூட்டத்தில் இணை இயக்குனர் விநீஷ் தலைமை வகிக்கிறார். இந்தக் கூட்டத்தில் ஆண்டு தொழில் ஆய்வு கணக்கீடு மற்றும் விவரங்கள் வழங்குவதில் பின்பற்ற வேண்டிய விதிகள் மற்றும் செயல்முறைகள் குறித்து உற்பத்தி நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு விளக்கப்பட உள்ளது.

இக்கூட்டத்தில் கோவை  மண்டல புள்ளியியல் இணை இயக்குனர் ஷெரினா, துணை இயக்குனர் அமுதவல்லி உட்பட கோவை, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்களிடமிருந்து பெறப்படும் தரவுகள் நாட்டின் பொருளாதாரம் மேம்பாட்டிற்கு எவ்விதத்தில் உதவியாக இருக்கும் என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe