சின்னத்தடாகம் பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம்...

published 4 days ago

சின்னத்தடாகம் பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம்...

கோவை:கோவை மாவட்டத்தில் தடாகம், மாங்கரை, ஆனைகட்டி, மருதமலை,  உள்ளிட்ட பகுதிகளில் காட்டு விலங்குகள் அதிகம் உள்ளன.

குறிப்பாக Reserve Forest பகுதிகளான ஆனைகட்டி, மாங்கரை அதனை ஒட்டியுள்ள தடாகம், சோமையனூர், திருவள்ளுவர் நகர், உள்ளிட்ட பகுதிகளில்  சிறுத்தை நடமாட்டமும் அவ்வப்போது தென்படுகிறது. 10 நாட்களுக்கு  முன்பு திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் சிறுத்தை இருந்த செல்போன் வீடியோ காட்சிகள் வைரலானது. 

இந்நிலையில் இன்று சின்னதடாகம்-  வீரபாண்டிப்புதூர் செல்லும் வழியில் சரவணன் என்பவரின் வீட்டிற்கு அருகில் கருஞ்சிறுத்தை ஒன்று நடமாடும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.  எனவே வீரபாண்டிபுதூர் செல்வோர் கவனமாக செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு வனத்துறையினர் கருஞ்சிறுத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe