சைபர் கிரைம் குற்றங்கள் மூலம் மட்டும் இந்த ஆண்டு மக்கள் இழந்த பணம் இத்தனை கோடியா?- கோவை காவல் ஆணையாளர் அளித்த தகவல்...

published 1 week ago

சைபர் கிரைம் குற்றங்கள் மூலம் மட்டும் இந்த ஆண்டு மக்கள் இழந்த பணம் இத்தனை கோடியா?- கோவை காவல் ஆணையாளர் அளித்த தகவல்...

கோவை: கோவை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள சைபர் க்ரைம் அலுவலகத்தில் பொதுமக்கள் தங்கள் புகார்களை நேரடியாக பதிவு செய்வதற்காக புதிதாகவும் தமிகத்தில் முதல் முறையாகவும் இயந்திரம் அறிமுகப்படுத்தி உள்ளனர்.அந்த இயந்திரம் மூலமாக பல்வேறு புகார்களை பதிவு செய்வதற்காக  கோவையில் அறிமுகப்படுத்தி உள்ளனர்.அதனை கோவை காவல் கமிஷனர் பாலகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,

கோவை மாநகர் சைபர் கிரைம் சார்பாக சைபர் குற்றங்களை தடுக்க முயற்சி எடுத்து வருவதாகவும் இந்த இயந்திரம் மூலம் ஈமெயில்,மொபைல் திருட்டு, வாகனம் எண் சரி பார்த்தல், செயல்கள் மூலம் குற்றம்,இணைய
வழி குற்றம் போன்ற பல்வேறு குற்றங்களை பொதுமக்கள் இந்த இயந்திர மூலமாக பதிவு செய்து புகார்களை சரி செய்து கொள்ளலாம் எனவும் புகார் குறித்து எந்த நிலையில் உள்ளது என்று தெரிந்து கொள்வதற்கு மிக சுலபமாக இருக்கும் என கூறினார்.

அதனை தொடர்ந்து கோவை மாநகர் காவல்துறை சார்பாகவும் பொது மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி சைபர் குற்றங்களை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த ஆண்டில் மட்டும் சைபர் க்ரைம் குற்றம் மூலமாக 91 கோடி ரூபாய் பொதுமக்கள் இழந்துள்ளனர் அதில் 49 கோடி ரூபாயை தடுக்கப்பட்டு 11 கோடி ரூபாயை பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் வழங்கப்பட்டதாகவும் கூறினார்.

கோவை மத்திய சிறையில் காவலர்களை கைதிகள் தாக்கி தப்பிக்க முயன்ற போது அவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கோவை மாநகரத்தில் கால் டாக்ஸி ஓட்டுனர்களை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

சைபர் க்ரைம் குற்றங்கள் குறித்து பொது மக்களுக்கு குறைந்த அளவில் விழிப்புணர்வு இருப்பதாகவும் பொதுமக்கள் கவனமாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அதற்கு காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

அதேபோல் டெலிகிராம் செயலி மூலம் வேலை வாங்கித் தருவதாக கூறி தற்போது அதன் மூலமாக சைபர் குற்றம் நடைபெற்று வருவதாகவும் கொரியர் மூலம் போதை பொருள் வந்திருப்பதாக கூறி மோசடி நடைபெற்று வருவதாகவும் பொதுமக்கள் விழிப்புணர்வு இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பின்னர் SPAM CALL என்று வந்தால் பொதுமக்கள் யாரும் அந்த அழைப்பை எடுக்காமல் துண்டித்து விட வேண்டியது எனவும் அதன் மூலமாக பல சிக்கல்கள் ஏற்படும் எனவும் கோவை மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe