என் குழந்தைய என்னடா செஞ்ச? கதறிய குடும்பம்! - நெஞ்சை உருக்கும் வீடியோ!

published 5 hours ago

என் குழந்தைய என்னடா செஞ்ச? கதறிய குடும்பம்! - நெஞ்சை உருக்கும் வீடியோ!

கோவை: கோவையில் மருத்துவமனையில் பராமரிப்புக்கு விடப்பட்ட வளர்ப்பு நாய் உயிரிழந்ததைப் பார்த்து ஒரு குடும்பமே கதறும் வீடியோ காட்சிகள் வெளியாகி காண்போர் நெஞ்சை உருக்கியுள்ளது.

கோவை, கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரத். இவர் தனியார் கம்பெனியில் மேலாளராக வேலை பார்த்து வருகின்றார். இவருடைய தந்தை குணசேகரன் மற்றும் தாயார் குமார் ஆகியோர் இருவரும் கூலித் தொழிலாளிகளாக வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இவருடைய தங்கை சுருதிக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. கடந்த 22 ஆம் தேதி கோவை ஜென்னி ரெசிடென்சியில் அதற்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனிடையே, இக்குடும்பத்தினர் கடந்த 11 ஆண்டுகளாக வளர்த்து வந்த நாயை பராமரிப்பதற்காக மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சஞ்சு விலங்குகள் நல மருத்துவமனையில் ரூ.1,200 கட்டணம் செலுத்தி விட்டுச் சென்றனர்.

ஆனால், அன்று மாலையே நாய் உயிரிழந்துவிட்டதாக அழைப்பு வந்துள்ளது. அதிர்ச்சியடைந்த மொத்த குடும்பமும், திருமண நிகழ்ச்சியை விட்டுவிட்டு மருத்துவமனைக்கு சென்று நாயின் உடலை பார்த்து கதறி அழுதது. மருத்துவரிடம் "என் குழுந்தைய உங்கள நம்பி விட்டேன். என்னடா செஞ்ச?" என்று கண்ணீர் மல்க கேள்வியெழுப்பியது நெஞ்சை உருக்கும் வகையில் இருந்தது.

இதுகுறித்த புகாரில் சாய்பாபா காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதனிடையே குடும்பத்தினர் கதறி அழும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

வீடியோவை காண லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்:https://www.instagram.com/p/DCyaxqsv5GO/

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe