கோவையில் புரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழப்பு!

published 10 hours ago

கோவையில் புரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழப்பு!

கோவை: கோவையில் புரோட்டா சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்ற கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகள் கீர்த்தனா (வயது 21). இவர் கற்பகம் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

கல்லூரி விடுதியில் தங்கிப்படித்து வந்த கீர்த்தனா, சனி, ஞாயிறு விடுமுறைக்காக வீட்டுக்கு வந்திருந்தார்.

நேற்று முன்தினம் இரவு புரோட்டா சாப்பிட்டுவிட்டு தூங்கச்சென்றவர், அதன்பின் கண் விழிக்கவில்லை.

தொடர்ந்து, கீர்த்தனாவை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார்.

இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புரோட்டா சாப்பிட்டுவிட்டு உறங்கிய கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe