கோவையில் களைகட்டும் உணவு திருவிழா...

published 2 days ago

கோவையில் களைகட்டும் உணவு திருவிழா...

கோவை: கோயம்புத்தூர் விழாவின் ஒரு பகுதியாக கொடிசியா மைதானத்தில் தமிழ்நாடு கேட்டரிங் சங்கம் சார்பில் இன்றும் நாளையும் கொங்கு திருமண உணவு திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெறுகிறது. 

 

இதில் 100க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டு 400க்கும் மேற்பட்ட சைவ, அசைவ உணவுகள், இனிப்புகள்,  குளிர்பானங்கள், பழச்சாறுகள் என ஏராளமான உணவுகள் பரிமாறப்பட்டன. அதுமட்டுமின்றி பல்வேறு உணவு நிறுவனங்கள் அவர்களது தயாரிப்பு பொருட்களையும் காட்சிப்படுத்தி உள்ளனர்.

இதற்கான நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 799 ரூபாயும் குழந்தைகளுக்கு 499 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டுமே பெற முடியும். முதல் நாளான இன்று ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் வருகை புரிந்து  உணவுகளை ருசித்து மகிழ்ந்தனர். மேலும் அப்பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe