கோவையில் பெண் சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய பாமக நிர்வாகி மீது வழக்கு…

published 1 week ago

கோவையில் பெண் சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய பாமக நிர்வாகி மீது வழக்கு…

கோவை: கோவை கணபதி புதூரை சேர்ந்தவர் அசோக் ஸ்ரீநிதி(35). பாமக நிர்வாகி. முன்னாள் மாவட்ட செயலாளர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், யூ-டுயூப் சேனல் மூலம் ஒருவர் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். 

அதன்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து கடலூர் மாவட்டத்தை சேர்ந்த முகமது இப்ராஹிமை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து நேற்று கோவை மாநகர சைபர் கிரைம் அலுவலகத்துக்கு வந்த அசோக் ஸ்ரீநிதி, அங்கிருந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யாவிடம், முகமது இப்ராஹிம் மீது ஏன் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யாமல் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என கேட்டு வாக்குவாதம் செய்தார். 

பின்னர் அவர் அந்த வழக்கின் சில ஆவணங்களை கிழித்து எறிந்ததாக தெரிகிறது. மேலும் பெண் சப் இன்ஸ்பெக்டரை தகாத வார்த்தைகளால் பேசியும், கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது குறித்து சுகன்யா ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் கீழ் பாமக நிர்வாகி அசோக் ஸ்ரீநிதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe