பாடகி இசைவாணி மீது இந்து முன்னனி கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் புகார்..

published 3 days ago

பாடகி இசைவாணி மீது இந்து முன்னனி கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் புகார்..

கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் I am Sorry Ayyappa என்கிற ஐயப்பன் பாடல் பாடிய பாடகி இசைவாணி மீது பஜனை பாடிய படி வந்து இந்து முன்னணியினர் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னனியினர்,

I Am Sorry ஐயப்பா என்று சர்ச்சைக்குரிய வகையில் இசைவாணி பாடல் பாடி தற்பொழுது ட்ரெண்டாகி வருவதாகவும் இந்த பாடல் கோடிக்கணக்கான ஐயப்பன் பக்தர்கள் மனதை புண்படுத்துகிறது என்றனர்.

இசைவாணி கிறிஸ்தவர் என்பதால் ஐயப்பனை இழிவுபடுத்தி பாட்டு பாடியதாகவும் பெண்கள் ஏன் கோவிலுக்கு வரக்கூடாது என என்று கிண்டலாக பாடி உள்ளார்.இது இரு மதத்தினர் இடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் தமிழகத்தில் அனைத்து மாவட்ட காவல் ஆணையர் மற்றும் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் கஸ்தூரி மீது நடவடிக்கை எடுத்தார்கள் ஆனால் இசைஞானி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தனர்.

திமுக ஆட்சியில் வலைதளங்களில் கருத்து பதிவிட்டால் கைது செய்கிறார்கள் ஆனால் சர்ச்சைக்குரிய வகையில் பாடியதற்கு கைது செய்யாமல் நடவடிக்கை எடுக்காமல்  இருக்கிறார்கள் என்றும் கடுமையாக நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.இந்து மதத்தையும் கலாச்சாரத்தை சீரழிக்க வருவதை வன்மையாக கண்டிப்பாக கூறினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe