கோவையில் உயர் ரக போதைப்பொருள், கஞ்சா பறிமுதல்- 2 வாலிபர்கள் கைது...

published 4 days ago

கோவையில் உயர் ரக போதைப்பொருள், கஞ்சா பறிமுதல்- 2 வாலிபர்கள் கைது...

கோவை: கோவை , கருமத்தம்பட்டி பகுதி வடுக்கன் காளிபாளையம் பகுதியில் கருமத்தம்பட்டி  போலீசார் வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமாக வந்த இரண்டு வாலிபர்களிடம் விசாரித்தனர். 

இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலிசார் வர்களது உடமைகளை சோதனையிட்டனர். சோதனையில் 6 கஞ்சா மற்றும் 2.5 கிராம் மெத்த பெட்டமைன் என்ற உயர் ரக போதை பொருளை மறைத்து வைத்து விற்பனைக்கு எடுத்துச் சென்றது தெரியவந்தது. 

இதனையடுத்து அவர்களிடமிருந்த போதைப் பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த சிபி (எ) விஷ்ணு கேசவன் (28) மற்றும் அஜித்குமார் (28) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe