Breaking: உக்கடம் புதிய பாலத்தில் விரிசல்? பொதுமக்கள் அச்சம்!

published 2 days ago

Breaking: உக்கடம் புதிய பாலத்தில் விரிசல்? பொதுமக்கள் அச்சம்!

கோவை: உக்கடம் புதிய மேம்பாலத்தில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளதை பார்த்து பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாநகரில் இருந்து பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலைகளை இணைக்கும் விதமாக உக்கடம் பகுதியில் இருந்து ஆத்துப்பாலம் வரை 3.8 கி.மீ தூரத்திற்கு புதிய மேம்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இந்த மேம்பாலத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் நிலையில், மேம்பாலத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு சரியான வழிகாட்டு பலகைகள் இல்லை என்றும், இதனால் பலர் வழி தவறி வெவ்வேறு பாதைக்கு சென்றுவிடுவதாகவும், மேம்பாலத்தில் அடிக்கடி மேடான இடங்கள் வருவதால் இடுப்பு வலி ஏற்படுவதாகவும் அதிருப்தி எழுந்தது.

இதனிடையே மேம்பாலத்தில், கரும்புக்கடை அருகே இன்று லேசான விரிசல் ஏற்பட்டு, சாலையில் மண் விழுந்தது.

சுமார் 2 அடி நீளத்திற்கு விரிசல் ஏற்பட்டதைப்பார்த்த பொதுமக்கள் அச்சமடைந்து இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe