உக்கடம் மேம்பாலம்: அச்சப்படத் தேவையில்லை நெடுஞ்சாலைத்துறை விளக்கம்!

published 2 days ago

உக்கடம் மேம்பாலம்: அச்சப்படத் தேவையில்லை நெடுஞ்சாலைத்துறை விளக்கம்!

கோவை: உக்கடம் மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ளதாக வந்த செய்தியை அடுத்து விரிசல் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

கோவை உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி பாலக்காடு,பேரூர், செல்வபுரம் ஆகிய பகுதிகளுக்கு விரைந்து செல்லும் வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.470 கோடி மதிப்பீட்டில் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை 3.8 கி.மீ நீளத்துக்கு கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் மக்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் திறந்து வைத்தார்.

இந்நிலையில் அந்த புதிய பாலத்தில் ஆத்துப்பாலம்  பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே விரிசல் ஏற்பட்டு பாலத்தில் ஒரு சில துகள்கள் உடைந்து கீழே விழுந்து உள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் பாலத்தைக் கடந்து செல்வதற்கு அச்சமடைந்தனர்.

இது குறித்து செய்தி வெளியான நிலையில், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதன்படி, இது விரிசல் அல்ல என்றும் பாலத்தின் இரண்டு அடுக்குகளுக்கான இடைவெளி என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும், பாலத்தின் சுமையை பில்லருக்கு எடுத்துச்செல்ல ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளதாகவும், அச்சப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe