கோவையில் போதை மற்றும் சமூக குற்றங்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிரிக்கெட் போட்டி…

published 21 hours ago

கோவையில் போதை மற்றும் சமூக குற்றங்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிரிக்கெட் போட்டி…

கோவை: கோவை கரும்பு கடை ஆசாத் நகர் பகுதியில் ஜீவ சாந்தி அறக்கட்டளை மற்றும் SSS பாய்ஸ் இணைந்து நடத்திய போதை மற்றும் சமூக குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்த வகையில் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை தெற்கு காவல் துணை ஆணையர் சரவணகுமார்,உதவி ஆணையர் அஜய் தங்கம்,சமூக அலுவலர் ரஃபீக் முகமது ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கினர்.

இந்த கிரிக்கெட் போட்டியில் சுமார் 40 அணியினர் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டது மட்டுமில்லாமல் காவல்துறை சேர்ந்த  நபர்களும் இந்த கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டனர்.

மேலும் முதல் பரிசு வென்றவர்களுக்கு 15,000 ரூபாயும்,  இரண்டாம் பரிசு வென்றவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும்,மூன்றாம் பரிசு வென்றவர்களுக்கு 5000 ரூபாய் காசோலைகள் வழங்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய காவல் துணை ஆணையர் சரவணகுமார்,

தற்பொழுது இளைஞர்கள் போதைப் பொருளை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இதுபோல தொடர்ச்சியாக விளையாட்டு போட்டிகளை நடத்தினால் இளைஞர்களின் போதனை பழக்கத்திலிருந்து விலகி  போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக விளங்குவார்கள் எனக் கூறினார்.

அதனை தொடர்ந்து பேசிய சமூக அலுவலர் முகமது ரஃபீக்,

போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் எனவும் போதை பொருள் குறித்து ஏற்கனவே இரண்டு குறும்படங்கள் வெளியிட்டதாகவும் அதே போல் இளைஞர்கள் போதையில் இருந்து மீண்டு வர இது போல விளையாட்டு போட்டிகள் நடத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe