காட்டிக்கொடுத்த கேமிரா: அபராதம் விதித்த கோவை மாநகராட்சி!

published 1 week ago

காட்டிக்கொடுத்த கேமிரா: அபராதம் விதித்த கோவை மாநகராட்சி!

கோவை: ஸ்மார்ட் சிட்டியான கோவை மாநகராட்சி முழுவதும் 100 வார்டுகள் உள்ளன. இங்கு நாள்தோறும் டன் கணக்கில் குப்பைகள் சேகரிக்கப்படும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீடுகளில் உள்ள குப்பைகளை சாலைகளில் ஓரம் வைக்கப்பட்டு இருந்த குப்பைத் தொட்டிகளில் கொட்டப்பட்டும், வீதிகளிலும் சாலை, ஓரங்களிலும் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வந்தது. 

இந்நிலையில் அதனை தடுக்கும் விதமாக கோவை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். முன்னதாக வீடுகளில் உள்ள குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை எனப் பிரித்து காலை வீட்டின் அருகே வரும் குப்பை சேகரிக்கும் வாகனங்களில் மற்றும் குப்பையை சேகரிக்கும் தூய்மை பணியாளர்களிடம் மட்டும் குப்பைகளை கொட்ட வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும் சாலை ஓரங்களிலும், குப்பை தொட்டிகளை அகற்றினர். இதனை அடுத்து குப்பைகளை சாலையோரம் மற்றும் வீதிகளில் வீசி செல்வோர் மீது அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் பகுதியில் இருந்து போத்தனூர் செல்லும் நஞ்சுண்டாபுரம் பாலத்தின் கீழ் பொது இடத்தில் குப்பையை நான்கு சக்கர வாகனத்தில் வந்து ஒரு நபர் கொட்டி உள்ளார். அந்த நபரை (சி.சி.டி.வி) கண்காணிப்பு கேமரா மூலம் காவல்துறை உதவியுடன் கண்டுபிடித்த மாநகராட்சி அதிகாரிகள். அந்த நபர் மீது திடக் கழிவு மேலாண்மை விதிகளை மீறியதற்காக ரூபாய் 5,000 அபராதம் விதித்து உள்ளனர். மேலும் இதுபோன்று பொது இடங்களில் சட்ட விரோதமாக குப்பைகளை கொட்டும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

சிசிடிவி காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://www.instagram.com/reel/DEIPiukSMBr/?igsh=MXJlamZra3BsNWo2ZQ==

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe