கோவை அருகே வாழை மரங்களை ருசிபார்த்து சென்ற யானைக்கூட்டம்- வீடியோ காட்சிகள் உள்ளே...

published 2 days ago

கோவை அருகே வாழை மரங்களை ருசிபார்த்து சென்ற யானைக்கூட்டம்- வீடியோ காட்சிகள் உள்ளே...

கோவை: கோவை அருகே வனப் பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்த காட்டு யானை கூட்டம் வாழை மரங்களை சேதப்படுத்தி சாப்பிட்டு விட்டு சென்றன. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை வடவள்ளி காவல் நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு காட்டு யானை கூட்டம் புகுந்தது. யானைகள் வீட்டின் அருகில் பயிரிடப்பட்டு இருந்த வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியது. வீட்டின் அருகில் யானைகள் மேய்சலில் ஈடுபட்டதால் குடியிருப்புவாசிகள் அச்சத்துடன் மொட்டைமாடிக்கு சென்றனர். 

வாழை உள்ளிட்ட பயிர்களை சாப்பிட்ட யானைகள் பின்னர் அங்கிருந்து சென்றன. வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் சம்பவ இடத்திற்கு அவர்கள் வராததால் பொது மக்கள் அதிருப்தி அடைந்தனர். வனத்துறையினர் யானை கூட்டத்தை கட்டுப்படுத்தாமல் இருப்பதால் இது போல அடிக்கடி ஊருக்குள் புகுந்து விடுவதாகவும், 

திறம்பட செயல் படும் வனத்துறையினரை இந்த பகுதியில் பணியமர்த்த வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://www.instagram.com/reel/DEZezLvv5vX/?igsh=MWc5d2h5N3Rzd2Q4bQ==

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe