சூப்பர் மார்க்கெட்டில் திருடிய முதியவர் சிக்கினார்…

published 12 hours ago

சூப்பர் மார்க்கெட்டில் திருடிய முதியவர் சிக்கினார்…

கோவை: கோவை சிங்காநல்லூர் திருச்சி ரோட்டில் சூப்பர்மார்க்கெட் உள்ளது. இங்கு நேற்று வழக்கம்போல ஊழியர்கள் வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தனர். அப்போது முதியவர் ஒருவர் தான் வாங்கிய மளிகை பொருட்களுக்கு பில் போட்டார். 

பின்னர் அதற்குண்டான ரூ. 133 ஐ செலுத்தி விட்டு அங்கிருந்து செல்ல முயன்றார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் அவரை சோதனை செய்த போது, சுமார் 6136 ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்களை பையில் மறைத்து வைத்து தப்பி செல்ல முயன்றது தெரியவந்தது. இது குறித்து ஊழியர்கள் சூப்பர்மார்க்கெட் மேலாளர் ராகுல்(29) என்பவருக்கு தகவல் கொடுத்தனர். அவர் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். 

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், திருட்டில் ஈடுபட்டது கோவைப்புதூர் அசோக் நகரை சேர்ந்த விமல ராஜா(60) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe