மூன்று பள்ளிக் குழந்தைகளுக்கு பிறவி இருதய குறைபாடு - இலவச இருதய சிகிச்சை செய்து கோவை அரசு மருத்துவமனை சாதனை !!!

published 1 week ago

மூன்று பள்ளிக் குழந்தைகளுக்கு பிறவி இருதய குறைபாடு - இலவச இருதய சிகிச்சை செய்து கோவை அரசு மருத்துவமனை சாதனை !!!

கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கவுண்டம்பாளையத்தை சேர்ந்த 13 வயது  மாணவி, திருச்சி முசிறி சேர்ந்த 15 வயது மாணவி, மற்றும் கோத்தகிரியைச் சேர்ந்த 15 வயது மாணவி  ஆகிய மூன்று பள்ளி மாணவிகள் Atrial septal defect என சொல்லக் கூடிய இருதயத்தில் துளை குறைபாடோடு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். 

இந்நிலையில் இருதய துளை குறைபாடு கொண்ட மூவருக்கும் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக சரி செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறும் போது : அரசு மருத்துவமனையின் இருதயவியல் துறை குழு இந்த துல்லியமான செயல்முறையை மேற்கொள்ள இரண்டு வாரங்களுக்கு முன்பே திட்டமிட்டு நோயாளியின் இதயத்தில் உள்ள துளையின் அளவை echocardiography முலம் அளவிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்தது. 

Percutaneous transcatheter முறை மூலம் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், இரத்த இழப்பு தவிர்க்கப்பட்டது. இந்த சிகிச்சை தேசிய சுகாதாரப் பணி மற்றும் அப்பல்லோவின் ஹீலிங் லிட்டில் ஹாட்ஸ் அமைப்பின் முயற்சியோடு இணைந்து நவீன சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தைகள் இருதய நோய் நிபுணர் முத்துக்குமரன் வழிகாட்டுதலின் படி வெற்றிகரமாக, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவசமாக செய்யப்பட்டதாகவும் தெரிவித்து உள்ளார்.

தற்போது மூன்று சிறுமிகளும் நலமோடு இருப்பதாகவும் தற்போது கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள நிபுணர்கள் குழுவால் இந்த செயல்முறை இலவசமாக செய்யப்படுவதால் பொதுமக்கள் இந்த மருத்துவ வசதிகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என முதல்வர் நிர்மலா கேட்டுக் கொண்டு உள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe