கோவையில் 'தாய்க்குடம் பிரிட்ஜ்' குழு நடத்தும் இசைக்கச்சேரி..!

published 2 years ago

கோவையில் 'தாய்க்குடம் பிரிட்ஜ்' குழு நடத்தும் இசைக்கச்சேரி..!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :  https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

கோவையில் செம்ம கச்சசேரிக்கு ரெடியா? "96" புகழ் கோவிந்த் வந்தாவின் இசைக்கச்சேரி

கோவை : 96 திரைப்பட புகழ் கோவிந்த் வந்தாவின் 'தாய்க்குடம் பிரிட்ஜ்' குழுவினர் நடத்தும் பிரம்மாண்ட இசைக்கச்சேரி கோவையில் வரும் 30 தேதி நடைபெற உள்ளது.  

இதுகுறித்து ரஷ் ரிபப்ளிக் நிறுவனத்தின் நிறுவனர் லக்‌ஷ்மிகாந்த் கூறியதாவது :

கொரோனா தாக்கம் குறைந்தவுடன் ஏற்கனவே சோசியல் சாண்டா என்ற ஷாப்பிங் நிகழ்ச்சியை நடத்தினோம்.

கொரோனா காலத்தில் வீட்டிலேயே  முடங்கிக்கிடந்த மக்களுக்கு வெளியில் செல்லும் ஆர்வம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் கோவையில் இசைக்கச்சேரியை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

தமிழ், மலையாளம், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் 'தாய்க்குடம் பிரிட்ஜ்' என்ற அமைப்பினர் இசைக்கச்சேரி நடத்துகின்றனர்.

இதற்கான டிக்கெட்டுகள் இணையத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. அதிக டிக்கெட்டுகள் வாங்க நினைப்பவர்கள் 9088144566 என்ற எண்ணை அழைக்கலாம்.

இந்த இசைக்கச்சேரியை நடத்தும் ‘தாய்க்குடம் பிரிட்ஜ்’ அமைப்பு உலகின் அனைத்து நாடுகளிலும் கச்சேரி நடத்தியுள்ளனர். ‘96’ படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வந்தா குழுவினர் தான் இந்த கச்சேரியை நடத்துகின்றனர்.

இந்த இசை நிகழ்ச்சி ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் வரும் 30ம் தேதி  மாலை 6 மணிக்குத் துவங்கி இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. டிக்கெட் விலை ரூ.500, ரூ.1000, ரூ.2500, ரூ.5000.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ரஷ் ரிபப்ளிக் நிறுவனத்தின் இணை நிறுவனர் மது, ஒருங்கிணைப்பாளர் எழில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe