வித..வித.. கம-கம சமையலுக்கு புதினா பொடி.. எப்படி செய்யனும்?

published 1 year ago

வித..வித.. கம-கம சமையலுக்கு புதினா பொடி.. எப்படி செய்யனும்?

புதினாவின் அற்புதக் குணங்கள் பற்றி தெரியுமா? இதைப்பற்றி தெரிஞ்சா புதினாவை விரும்பி சாப்பிடுவீங்க...செரிமானம் சம்மந்தமான பிரச்சனைகளுக்கு அரும்மருந்து புதினா. பசியின்மைக்கு தீர்வாக விளங்குகிறது.உடல் எடையை குறைக்க மற்றும் முகம் பொலிவு பெற உதவுகிறது. பல்வேறு உடல்ரீதியான நோய்களுக்கு தீர்வாக அமைகிறது.

தினமும் ஒரே மாதிரியாக சமைப்பதற்குப்பதில் புதிதாக ஒன்றை ட்ரை பண்ணலாமா? தோசை மற்றும் இட்லிக்கு எப்போதும் சம்பார் சட்னி என்று சாப்பிட்டுவது வழக்கமான ஒன்று. இட்லி தோசைக்கு நல்லெண்ணெய் விட்டு தொட்டு சாப்பிட ஒரு பொடி இருந்தாலும் நன்றாக தான் இருக்கும். ருசியான புதினா பொடியை எப்படி வீட்டிலேயே செய்வது என பார்ப்போம்.


தேவையான பொருட்கள்

புதினா

உளுத்தம் பருப்பு

மிளகாய் வற்றல்

கறிவேப்பிலை

பெருங்காயம்

நல்லெண்ணெய் .

உப்பு

செய் முறை

தேவையான அளவு புதினாவை நன்கு கழுவி ஈரம் போக ஆறவைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து சூடேறியதும் உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை இவற்றை சேர்த்து, உளுத்தம்பருப்பு நன்கு சிவக்கும் வரை வறுக்க வேண்டும்.

வறுபட்ட பின் அதில் சிறிது பெருங்காயமும், உப்பும் சேர்த்து வறுத்து எடுத்துக்கொண்டு, ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு புதினாவை நன்கு வதக்கி, எல்லாவற்றையும் நன்கு ஆற வைத்து மிக்ஸியில் புதினா தவிர்த்து மற்ற பொருட்களை அரைத்து எடுக்கவும்.

பின் இறுதியில் புதினாவையும் சேர்த்து அரைத்து எடுத்தால் அருமையான புதினா பொடி தயார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe