கோவையில் ஓணம் களி நடனம் ஆடிய மாணவ-மாணவிகள் | புகைப்பட தொகுப்பு | Onam Photos

published 1 year ago

கோவையில் ஓணம் களி நடனம் ஆடிய மாணவ-மாணவிகள் | புகைப்பட தொகுப்பு | Onam Photos

கோவை: அத்தப்பூ கோலம், திருவாதிரை களி, ஓணம் சத்யா என கோவை தனியார் கல்லூரியில் ஓணம் திருவிழா கொண்டாட்டம் களைகட்டியது.
இதில் மாணவ மாணவிகள் செண்டை மேளம் முழங்க மாணவர்கள் உற்சாகமாக நடனமாடினர்.

மலையாள மக்களால் ஓணம் திருவிழா கொண்டாடப்படுகிறது. மகாபலி அரசர் திருவோண நட்சத்திரத்தன்று மலையாள மக்களை காண வருவதையே "ஓணம் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர்.

10 நாட்கள் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை மலையாள மொழி பேசும் மக்கள் அவரவர் வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு மகாபலி அரசரை வரவேற்க தயாராகின்றனர்.

அப்போது சிறப்பு பூஜை செய்து பாரம்பரிய உடை அணிந்து கேரள பாரம்பரிய திருவாதிரை களி (நடனம்) ஆடி வரவேற்று மகிழ்கின்றனர்.

இப்பண்டிகையை உலகம் முழுவதிலும் இருக்கும் மலையாள மக்கள் கொண்டாடி வரும் நிலையில் கோவை நவக்கரை பகுதியில் அமைந்துள்ள ஏ.ஜே.கே கல்லூரியில் ஓணம் விழா களைகட்டியது.

இதில் ஒவ்வொரு பாடப்பிரிவை சேர்ந்த மாணவர்கள் இசை வாத்தியங்கள் மற்றும் செண்டை மேளம் முழங்க இரண்டு கிலோ மீட்டருக்கு மேலாக ஊர்வலமாக அணிவகுத்து சென்றனர்.

வாத்தியங்களின் இசைக்கு ஏற்ப மாணவர்கள் மற்றும் மாணவிகள் நடனம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதனையடுத்து பாரம்பரிய கேரள உடைய அணிந்து மாணவிகள் நாங்களும் சலித்தவர்கள் அல்ல என்பது போல் குத்தாட்டம் போட்டனர்.

மேலும், அத்தப்பூ கோலமிட்டு கேரளா பாரம்பரிய உடை அணிந்த மாணவிகள் மகாபலி அரசரை வரவேற்று திருவாதிரை நடனமாடினர். செண்டை மேளம் முழங்க மகாபலி அரசரை வரவேற்க நடைபெற்ற  திருவாதிரை களி காண்போரையும் நடனமாட வைத்தது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe