கோவையில் போலிஸ் என்று கூறி ரெஸ்டாரெண்ட் உரிமையாளர்களிடம் பணம் பறிக்க முயன்ற நபர் கைது...

published 1 week ago

கோவையில் போலிஸ் என்று கூறி ரெஸ்டாரெண்ட் உரிமையாளர்களிடம் பணம் பறிக்க முயன்ற நபர் கைது...

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/FePOfH8LTBKE40nzrfPpnD

கோவை: கோவை கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சென்னப்பச்செட்டி புதூரில் உள்ள உழவன் ரெஸ்டாரன்ட் உரிமையாளர் மூர்த்தி மற்றும் காடுவெட்டி பாளையத்தில் உள்ள கொக்கரக்கோ ரெஸ்டாரன்ட் உரிமையாளர் துரைசாமி. 

இவர்களை ஒரு நபர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தான் மங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் என்றும் பத்தாயிரம் ரூபாய் கூகுள் பே செய்தால் மது விற்பனை செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.


அப்போது கொக்கரக்கோ ரெஸ்டாரன்ட் உரிமையாளர் துரைசாமி காடுவெட்டி பாளையம் பகுதிக்கு வந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனை அடுத்து அங்கு சென்ற அந்த நபர் துரைசாமியிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த துரைசாமி அவரை பிடித்து கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். 

பின்னர் அங்கு சென்ற கருமத்தம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்குமார் பணம் கேட்டு மிரட்டிய நபரை விசாரித்த பொழுது அவர் அன்னூர் கஞ்சப்பள்ளி அருகே உள்ள நீல கவுண்டன் புதூரை சேகர்(31) என்பதும் போலீஸ் பெயரை சொல்லி பணம் கேட்டு மிரட்டியதும் தெரிய வந்தது.


பின்னர் அவரை கைது செய்த காவல்துறையினர் துரைசாமியின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.


சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw