வாக்காளர் பட்டியல் குறித்து அரசியல் கட்சிகள் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…

published 1 week ago

வாக்காளர் பட்டியல் குறித்து அரசியல் கட்சிகள் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/CFoSUzRjtqAEmBrOacEIKZ

கோவை: கோவையில் பல்வேறு வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட இருப்பதாக நேற்று தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் பலரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இது குறித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ள மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி,


ஒவ்வொரு ஆண்டும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் பேரில் அக்டோபர் மாதத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட மனுக்கள் களஆய்வு செய்து ஜனவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

2024 ஆம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.


வாக்காளர் பட்டியலில் தங்களது கோரிக்கைகள், குறைகளை எளிதில் அணுகி தெரிவிக்கும் வகையில் வார விடுமுறை நாட்களில் குடியிருப்பு பகுதிகளின் அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

27.10.2023 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்யப்பட்ட பெயர்கள் குறித்தான ஆட்சேபணைகள் எதுவும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரால் தெரிவிக்கப்படவில்லை.


இதனைத்தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் 22. 1 . 24ஆம் தேதி அன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

இப்பட்டியலில் கண்டுள்ள பெயர் நீக்கம் தொடர்பான ஆட்சேபனைகள் எதுவும் அரசியல் கட்சியினரால் தெரிவிக்கப்படவில்லை. இந்தப் பட்டியல் கிராம சபை கூட்டங்களிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது  என கடந்த காலங்களில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பின் போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்  குறித்த விவரங்களை அறிக்கையாக கோவை மாவட்ட நிர்வாகம்  வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது





சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw