கோவை, ஈரோடு, சேலம் வழியாக கேரளா-பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் சேவை!

published 6 months ago

கோவை, ஈரோடு, சேலம் வழியாக கேரளா-பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் சேவை!

கோவை: எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூருக்கு சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு:

பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் எர்ணாகுளம்- பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

ஜூலை 31ம் தேதி முதல் ஆகஸ்ட் 26ம் தேதி வரை இந்த சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.

எர்ணாகுளம்-பெங்களூரு இடையே புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் இந்த ரயில் இயக்கப்படும். எர்ணாகுளத்தில் பகல் 12.50 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் போத்தனூர் ரயில் நிலையத்தில் மாலை 4.13-4.15 வரை நின்று செல்லும். சேலத்திற்கு மாலை 6.33க்கு சென்றடையும். 

பெங்களூரு கண்டோன்மென்டுக்கு இரவு 10 மணிக்கு சென்றடையும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பெங்களூரு-எர்ணாகுளம் இடையே செவ்வாய், சனி மற்றும் திங்கட்கிழமைகளில் மட்டும் இந்த சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. பெங்களூரில் காலை 5.30க்கு புறப்படும் இந்த ரயில் சேலத்திற்கு காலை 8.58க்கும், ஈரோட்டிற்கு காலை 9.50க்கும், திருப்பூருக்கு 10.33க்கும், போத்தனூருக்கு 11.15க்கும் வந்து எர்ணாகுளத்திற்கு மதியம் 2.20க்கு சென்றடையும்.

இவ்வாறு தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe