உயிர் - உலகுடன் நடிகை நயன்தாரா... வைரலாகும் போட்டோஸ்!

published 3 months ago

உயிர் - உலகுடன் நடிகை நயன்தாரா... வைரலாகும் போட்டோஸ்!

நடிகை நயன்தாரா தன்  குழந்தைகளுடன், நேரம் செலவிடும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது. லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடிதான் படத்தில் நடிக்கும் போது, விக்கி - நயன்தாரா இடையே நட்பு ஏற்பட்டு, பின்னர் காதலாக மலர்ந்தது.  இவர்கள் இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் சில ஆண்டுகள் தொடர்ந்தனர். தொடர்ந்து வெளிநாடுகளில் டேட்டிங் செய்ய  தொடங்கினர்.

நயன் - விக்கி இருவரும் காதலிக்க துவங்கிய ஒரே வருடத்தில் ரிஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.பொதுவெளியில் பிரமாண்டமாக திருமணம் செய்த பின்னர்,  வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு அம்மாவாக மாறினார். 

நயன் சமூக வலைத்தளங்களில் தனது குழந்தைகளுக்கு இருக்கும் புகைப்படங்களை அவ்வப் போது பகிர்வார். அந்த வகையில் தற்போது தன் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் சில புகைப்படங்களை வெளியிட்டுளளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe