தட்கல் திட்டத்தில் பதிவு செய்தும் பல மாதங்களாக மின் இணைப்பு வழங்கப்படவில்லை- கோவை, திருப்பூர் விவசாயிகள் புகார்...

published 4 months ago

தட்கல் திட்டத்தில் பதிவு செய்தும் பல மாதங்களாக மின் இணைப்பு வழங்கப்படவில்லை- கோவை, திருப்பூர் விவசாயிகள் புகார்...

கோவை: கோவை, திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு விவசாய பாதுகாப்பு சங்கம் மற்றும் பல்வேறு விவசாய அமைப்பினர் ஒருங்கிணைந்து கோவை டாடாபாத் சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமைச் பொறியாளர் சந்தித்து தட்கல் திட்டத்திலும் மற்றும் அனைத்து வகை வேளாண் மின் இணைப்பு திட்டங்களிலும் 2 ஆண்டுகளாக காக்க வைக்கப்பட்டுள்ள 30,000- க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வேளாண்மை மின் இணைப்புகள் உடனடியாக வழங்க கோரி 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மனு அளித்தனர்.

*பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய விவசாயி அரசேந்திரன்:-*

தமிழ்நாடு மின்சார வாரியம் தட்கல் திட்டத்தை அறிமுகப்படுத்தி விவசாயிகளுக்கு வேளாண் மின் இணைப்புகள் 90 நாட்களில் வழங்க வேண்டும் அதற்கு 5 HP-க்கு 2.5 லட்சம்,7.5 HP-க்கு 2.75 லட்சம்,10  HP-க்கு 3 லட்சம்,15 HP-க்கு 4 லட்சம் என கட்டணம் நிர்ணயித்து அறிவித்துள்ளனர்.

ஆனால் 15 ஆண்டுகள் ஆகியும் காத்துக் கொண்டிருக்கும் விவசாயிகள் 90 நாட்களில் மின் இணைப்பு வழங்கப்பட்டு விடும் என்று நம்பிக்கையில் கடன் வாங்கி 1 லட்சத்து 50 ஆயிரதுக்கு மேற்பட்ட விவசாயிகள் தட்கல் திட்டத்தில் விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த 2022 வரை ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது 90 நாட்கள் மின் வேளாண் மின் இணைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்னும் நடைமுறைப்படுத்தாமல் தட்கல் திட்டத்தில் மட்டும் பணம் கட்டிய விவசாயிகளுக்கு 30 ஆயிரம் மேற்பட்டவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மின் இணைப்பு பெறாமல் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தட்கல் திட்டத்தின் பணம் செலுத்தி காத்துக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு மட்டும் தமிழ்நாடு மின்சார வாரியம் உபகரணங்கள் இல்லை என்று சொல்லி காலம் தாழ்த்தி வருவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு.

இதுகுறித்து விவசாயிகள் குறித்த தீர்ப்பு கூட்டங்களிலும்,மின்சார வாரியத்திடம் பலமுறை நேரிலும் அஞ்சல் மூலமாகவும் புகார் அளித்தும் இரண்டு ஆண்டுகளாக ஒரு மின் இணைப்பு கூட விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe