பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் சைக்கிள் பந்தயம்- விவரங்கள் மற்றும் நடைபெறும் தேதி அறிவிப்பு...

published 6 days ago

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் சைக்கிள் பந்தயம்- விவரங்கள் மற்றும் நடைபெறும் தேதி அறிவிப்பு...

கோவை: தமிழ்நாடு முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளினை சிறப்பிக்கும் வகையில் 04.01.2025 அன்று காலை 08.00 மணிக்கு அண்ணா மிதிவண்டி போட்டிகள் கோவைபுதூர் மின்வாரிய அலுவலகம் முன் துவக்கி ஆர்டிஓ அலுவலகம் CBM கல்லூரி வழியாக சென்று திரும்பி மீண்டும் மின்வாரிய அலுவலகம் வந்தடையும் வகையில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கோவை மாவட்டப்பிரிவு மூலமாக மிதிவண்டி போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டிகள்  மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கு தனித்தனியாக நடத்தப்படவுள்ளது.

போட்டியின் விவரங்கள்,

போட்டியில் பங்கேற்பவர்கள் தலைமை ஆசிரியர் கையொப்பமிட்ட வயது சான்றிதழ் ஆதார் மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல்களை 03.01.2025 மாலை 5.00 மணிக்குள் மாவட்ட விளையாட்டு (ம) இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் மாணவ மாணவியர்களுக்கு  பரிசுகளும் தகுதிச் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

முதல்பரிசு ரூ.5000, 
இரண்டாம்பரிசு ரூ.3000,
மூன்றாம்பரிசு ரூ.2000

4 முதல் 10 இடங்களில் வருபவர்களுக்கு ரூ250 ஆகும். இப்போட்டிகளில் பங்கேற்க இந்தியாவில் தயாரான சாதாரண மிதிவண்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.


மேலும் தகவல்களுக்கு 7401703489 என்ற எண்ணில் மாவட்ட
விளையாட்டு அலுவலரை தொடர்பு கொள்ளலாம்என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe