கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்டியிட்டு மனு அளித்த வால்பாறை ஆட்டோ ஓட்டுநர்கள்...

published 4 hours ago

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்டியிட்டு மனு அளித்த வால்பாறை ஆட்டோ ஓட்டுநர்கள்...

கோவை: வால்பாறையில் கூடுதல் ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்க கூடாது என வலியுறுத்தி இதர ஆட்டோ ஓட்டுநர்கள் மனு அளித்துள்ளனர்.

கோவை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் (CITU) வால்பாறை வட்டத்தினர், வால்பாறையில் கூடுதல் ஆட்டோகளுக்கு அனுமதி வழங்க கூடாது என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

வால்பாறை நகர் பகுதியே சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் தான் எனவும் அதற்குள்ளாகவே ஏற்கனவே என்பது ஆட்டோக்கள் இயங்கி வரும் நிலையில் கூடுதலாக 100 ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருவதாகவும் இதனால் தங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்தனர். 

ஏற்கனவே மகளிர்க்கு இலவச பேருந்து இருப்பதால் ஆட்டோவை பெரும்பாலும் யாரும் பயன்படுத்துவதில்லை எனவும் இத்தகைய சூழலில் கூடுதலாக ஆட்டோக்களுக்கான அனுமதி அளித்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தெரிவித்தனர்.

எனவே கோரிக்கையை வலியுறுத்தி மண்டியிட்டு வழங்கினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe