SSA கல்வி நிதியை உடனடியாக வழங்கு, ஆளுநரை திரும்ப பெறு- அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம்...

published 2 hours ago

SSA கல்வி நிதியை உடனடியாக வழங்கு, ஆளுநரை திரும்ப பெறு- அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம்...

கோவை: தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய SSA கல்வி நிதியான 573 கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் தான் நிதி ஒதுக்கப்படும் என்ற போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.

மாணவர்களிடம் பிற்போக்கு கருத்துக்களை ஆளுநர் ஆர்.என் ரவி விதைத்து வருவதாகவும், தமிழ்நாட்டின் கல்வி முறைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் துணை வேந்தர்களாக ஆளுநர் நியமிப்பதாகவும் கூறி அதற்கு கண்டனம் தெரிவித்தும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் இன்று தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட குழு சார்பில் ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள bsnl அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் ஆளுநரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை தராததால், தமிழ்நாட்டில் தொடக்கப் பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆசிரியர்களுக்கு ஊதியம் தர முடியவில்லை எனவும் கல்வி கட்டமைப்புகளை மேம்படுத்த முடிவதில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள்  தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe