நம் வீடுகளை ஜொலிக்க வைக்க தொழிலாளர்கள் மும்முரம்!

published 4 days ago

நம் வீடுகளை ஜொலிக்க வைக்க தொழிலாளர்கள் மும்முரம்!

கோவை: கோவையில் மண் விளக்குகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கார்த்திகை தீபத்திருநாளில் ஒவ்வொருவர் வீடுகளையும் அலங்கரிப்பது அகல் விளக்குகள். கார்த்திகை தீபம் வரும் 13ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாட்டு பணிகளை தொழிலாளர்கள் விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் மண்பாண்ட தொழிலாளர்கள் அதிகளவில் வசித்து வரும் நிலையில், அவர்கள் அகல் விளக்குகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இங்கிருந்து கோவை உட்பட அண்டை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும், பொதுமக்களும் அதிக அளவில் விளக்குகளை வாங்கிச்செல்வது வழக்கம்.

இதற்காக 2 இன்ச் முதல், 5 அடி வரையும், 1 முகததில் இருந்து 21 முகங்கள் கொண்ட விளக்குகள் கோவையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மண்பாண்டத் தொழிலாளர்கள் அரசிடம், மண் எடுக்க உரிமை, அடிப்படை விலை, அரசே விளக்குகளை கொள்முதல் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்துகின்றனர்.

ஆனால், அவர்கள் கோரிக்கை இன்னும் கோரிக்கையாகவே உள்ள நிலையில், விளக்கு ஏற்றும் கோவை மக்கள் நேரடியாக கவுண்டம்பாளையம் போலீஸ் செக்போஸ்ட் எதிரே உள்ள குயவர் குடியிருப்புக்குச் சென்றால், இம்மக்களிடம் நேரடியாக விளக்குகளை வாங்கி, அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவலாம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe