கோவையில் தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்...

published 5 days ago

கோவையில் தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்...

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பாக  2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்த காத்திருப்பு போராட்டத்தில் தமிழக அரசு வருவாய்த்துறை அலுவலர்களின் கோரிக்கைகளான, காலிப் பணியிடங்களை நிரப்புதல், கருணை அடிப்படையில் 25% பணி வழங்குதல், பேரிடர் மேலாண்மை துறை நகர்ப்புற நிலவரி பணியிடங்களையும் சமூக பாதுகாப்பு திட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த கோரிக்கைகளை எல்லாம் வலியுறுத்தி 40க்கும் மேற்பட்ட வருவாய் துறை பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து பேசிய தமிழ்நாடு வருவாய் சங்க கோவை மாவட்ட செயலாளர் கமலஹாசன், இந்தப் போராட்டம் மூன்றாம் கட்டமாக நடைபெறுவதாகவும்,  கருணை அடிப்படையில் பணி நியமனம் என்பது கடந்த காலங்களில் 25%  இருந்ததாகவும் தற்பொழுது 5% குறைக்கப்பட்டு விட்டதாகவும் இதனால் மிகப்பெரிய அநீதியை இந்த அரசு செய்துள்ளதாகவும் எனவே பழைய முறைபடியே 25% தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

பேரிடர் மேலாண்மை துறையில் இருந்த 97 பணியிடங்களை இந்த அரசு கலைத்து விட்டதாகவும் அதனை மீண்டும் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர் கலைக்கப்பட்ட நகர்புற நிலவரி பணியிடங்கள் சமூக பாதுகாப்பு திட்ட பணியிடங்கள் ஆகியவற்றையெல்லாம் மீண்டும் வழங்க வேண்டும் என்றார். கடந்த மூன்று ஆண்டுகளாக 3000 மேற்பட்ட அலுவலக பணியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாகவும் உடனடியாக அதனை நிரப்ப வேண்டும் என கூறினார். 

பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்தப்படும் என்று முதல்வர் வாக்குறுதி அளித்ததை நிறைவேற்ற வேண்டும் எனவும் கூறினார். கொரோனா காலத்தில் வழங்கப்பட்ட ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து அதற்கான பணபலன்களை பெற்று வந்ததாகவும் ஆனால் கொரோனாவை காரணம் காட்டி இந்த அரசு நிறுத்தி வைத்து விட்டதாகவும், சில மாதங்களில் வழங்கப்படும் என்று கூறிய நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை என்று குறிப்பிட்டுள்ளதால் அதனையும் உடனடியாக வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

இதுவரை இது சம்பந்தமாக தங்களுடைய மாநில தலைவர்களை அரசு சார்பில் அழைத்து பேசவில்லை எனவும் அவ்வாறு அழைத்துப் பேசும் பட்சத்தில் இந்த போராட்டம் எந்த வடிவில் போகும் என்பது குறித்து மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe