என்ன பரமசிவம் வர்ட்டா... காட்டு யானைகளைக்கண்டு அஞ்சாத கோவை தாத்தா...! வீடியோ காட்சிகள் உள்ளே…

published 11 hours ago

என்ன பரமசிவம் வர்ட்டா... காட்டு யானைகளைக்கண்டு அஞ்சாத கோவை தாத்தா...! வீடியோ காட்சிகள் உள்ளே…

கோவை: கோவை கணுவாய் அருகே காட்டு யானைகள் சாலையை கடந்து செல்ல முயன்றதை, பார்த்தவாறே எவ்வித பதற்றமும் இல்லாமல் முதியவர் ஒருவர் ஹாயாக மொப்பட்டில் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், மாங்கரை,  ஆனைக்கட்டி, கணுவாய், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மலை மற்றும் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அவ்வப்போது ஊருக்குள் உலா வருகின்றன.

இந்நிலையில் கணுவாயை அடுத்த நர்சரி பகுதியில் இரண்டு காட்டுயானைகள் சாலையை கடந்து மலைக்குள் சென்றுள்ளன. அந்நேரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் ஒருவர் யானையை பார்த்தவாறே ஹாயாக கடந்து சென்றுள்ளார்.

இதனை அங்கிருந்த பொதுமக்கள் செல்போனில் பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/4pAzaiI06yo

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe