அன்னூர் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும்- ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்…

published 4 days ago

அன்னூர் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும்- ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்…

கோவை: கோவை சத்தியமங்கலம்,மைசூர், ஊட்டி ஆகிய பகுதிகளுக்கு அன்னூர் வழியாக செல்வதனால் அந்தப் பகுதியில் தினசரி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.அதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் அந்த பகுதியில் பாலம் அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அன்னூர் ஒன்றிய குழு சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மணிகண்டன், அன்னூர் பகுதியில் தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அப்பகுதிகளுக்கு பொதுமக்கள் வெளியே வர முடியாத சூழல் மற்றும் அவசரத்தில் கூட ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல முடியவில்லை
நிலைமை ஏற்பட்டுள்ளது.

மேலும் அந்தப் பகுதியில் சாலையை விரிவாக்க வேண்டும் அல்லது மேம்பாலம் அமைத்தால் போக்குவரத்து நெரிசல் குறையும் என தெரிவித்தனர்.தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக விரைந்து இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe