மருதமலை கோயிலுக்கு ஆலோசனை தர வேண்டுமா?

published 6 days ago

மருதமலை கோயிலுக்கு ஆலோசனை தர வேண்டுமா?

கோவை: மருதமலை கோயில் நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்கும் விதமாக டிஜிட்டல் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.

கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், பொதுமக்களிடம் ஆலோசனைகளைப் பெற்று அதற்கேற்ப மேம்பாட்டுப் பணிகள் தொடர கோயில் நிர்வாகம் முடிவு செய்தது.

இந்த நிலையில், கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் ஆலோசனைகளை வழங்கும் விதமாக திருக்கோயில் வளாகத்தில், டிஜிட்டல் ஆலோசனைப் பெட்டியைத் திருக்கோயில் வளாகத்தில் வைக்க முடிவு செய்யப்பட்டது.

அந்த வகையில் தொடுதிரை அம்சத்துடன் கூடிய டிஜிட்டல் ஆலோசனைப் பெட்டியை இன்று அறங்காவலர் குழு தலைவர் ஜெயகுமார், துணை ஆணையர்  செந்தில்குமார், அறங்காவலர்கள் மகேஷ்குமார், பிரேம்குமார், கனகராஜன், சுகன்யா ராசரத்தினம் ஆகியோர் நிறுவி, மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.

இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe