கோவை வந்தடைந்தார் திரவுபதி முர்மு

published 5 days ago

கோவை வந்தடைந்தார் திரவுபதி முர்மு

கோவை: தமிழகத்தில் நான்கு நாள் பயணம் மேற்கொள்ளும் குடியரசுத்தலைவர் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.

குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு தமிழகத்தில் 4 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார். இதற்காக டில்லியிலிருந்து விமானம் மூலம் இன்று காலை கோவை வந்தடைந்தார்.

இங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மோசமான வானிலை காரணமாக அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டு, சாலை மார்க்கமாக கோவையிலிருந்து நீலகிரி புறப்பட்டார்.

அங்கு வெலிங்டனில் ராணுவ பயிற்சி கல்லூரியில் அதிகாரிகளையும், பழங்குடி மக்களையும் சந்திக்கிறார். நீலகிரி ராஜ்பவனில் ஒரு நாள் ஓய்வுக்குப் பின், திருச்சி செல்கிறார். வரும் 30 ஆம் தேதி திருவாரூர் மத்திய பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில்  திரௌபதி பங்கேற்க இருக்கிறார்.

குடியரசுத்தலைவர் வருகையை ஒட்டி கோவை, நீலகிரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe